தைப்பூச திருவிழா குறித்த கேள்விகள்? பற்றித் தெளிவாக காண்போம்.
- எந்தெந்த வகையான பதிவுகள் பதியப்படுகிறது?
தற்போது இரண்டு வகைக்கு மட்டும் பதிவு செய்யப்படுகிறது. முதலாவதாக, பால் குடத்திற்கு பதியப்படுகிறது. பால்குடத்தில் இருவகை பால் குடங்கள் இருக்கிறது. சுயமாக தயாரிக்கப்பட்ட பால்குடங்கள், கோயில்களால் தயாரிக்கப்பட்ட பால்குடங்கள் ஆகிய இரண்டு வகையான பால் குடங்களுக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.சுயமாக தயாரிக்கப்பட்ட பால் குடங்களுக்கான பதிவு கட்டணம் 15 வெள்ளி. இது ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும். கோயில்களால் தயாரிக்கப்பட்ட பால்குடங்களைப் பெற்றுக்கொண்டு ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் காணிக்கையைச் செலுத்தலாம். இரண்டு வகையான பால் குடங்களுக்கும் இணைய வழியாக பதிவுச் செய்து கொள்ளலாம்.
இரண்டாவதாக,காவடிகளுக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.அலகு காவடி, ரதக்காவடி ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதைத் தவிர மற்ற காவடிகளுக்கு இரு கோயில்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
2. இணைய வழி மூலம் பதிய இயலாதவர்கள் எவ்வாறு பதியலாம்?
பெரும்பாலோனர் இணைய வழியாக பதிவு செய்துள்ளனர். இணைய வழியாக பதிவு செய்ய இயலாதவர்கள் இரு கோவில்களுக்கும் தொடர்புக் கொள்ளலாம். ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் தன்னார்வலர்கள்(Volunteers)இருக்கிறார்கள். அவர்களின் நேரடியாக அணுகினால் பதிவு செய்வதற்கு உதவுவார்கள்.
3. Covid-19 கிருமி பரவலுக்கான கட்டுப்பாடு நடவடிக்கைகள் இருக்கிறதா?
சிங்கப்பூர் அரசாங்கம் இதற்கென கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி நடந்துக் கொள்ள வேண்டும். கிருமி தொற்று பரவக்கூடும் என்று நினைப்பவர்கள் முக கவசம் அணிந்துக் கொள்ளலாம்.
4. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் யாரிடம் கேட்க வேண்டும்?
இரு கோவில்களும் இணைந்து நிறைய தொண்டு ஊழியர்களை ஏற்பாடு செய்துள்ளன. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களிடம் கூறினால் உதவியைச் செய்து தருவார்கள். மூத்தோர்கள் அல்லது ஊனமுற்றவர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.ஸ்ரீ தண்டாயுதபாணி tank road இணையும் இடத்தில் ஒரு பாதை மூத்தோர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு நிறைய தொண்டு ஊழியர்கள் இருப்பார்கள். அவர்கள் இவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உதவி செய்வார்கள்.
இது குறித்த மேலும் தகவலுக்காக thaipusam.sg என்ற இணைய பக்கத்திலும் தெரிந்து கொள்ளலாம்.அல்லது ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய எண் : +65 67379393