ஜனவரி 25-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டில் புதன்கிழமை அன்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் 2 PCR கள் குறித்த வழக்கு நடைபெற்றது. Wei Jianqin மற்றும் Chen mei ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
மனிதவள அமைச்சகம்(MOM ) இருவரில் ஒருவருக்கு சிங்கப்பூரில் பணியாளராகவும், மற்றொருவர் பொது தொழிலாளியாகவும் வேலை செய்வதற்கு வேலை வாய்ப்பு பாஸை(E Pass) வெளியிட்டு இருந்தது.
Wei JianQin க்கு ஒரு வருட E Pass கடந்த 2007- ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி பணியாளராக பணிபுரிய கொடுக்கப்பட்டது. Chen mei க்கு இரண்டு வருட E Pass கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17-ஆம் தேதி பொது தொழிலாளியாக பணியாற்ற கொடுக்கப்பட்டது.
MOM க்கென விதிமுறைகள் கட்டுப்பாடுகள் இருக்கிறது.MOM வலைத்தளத்தின் படி, சிங்கப்பூரில் வேலைச் செய்ய வெளிநாட்டு தொழில் வல்லுநர்கள், மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர்களுக்கு E Pass அனுமதிக்கப்படுகிறது. நிர்வாக, நிர்வாகி அல்லது சிறப்பு வேலைகளில் E Pass வைத்திருப்பவர்கள் பணியாற்ற வேண்டும். E Pass மூலம் வருபவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதிகள், தொழில் முறை தகுதிகள் அல்லது ஏதேனும் சிறப்பு திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு இருப்பவர்களுக்கு MOM E Pass அளிக்கிறது.
நீதிமன்ற ஆவணங்களில் வழக்கு பதியப்பட்ட இரண்டு PCR களுக்கு MOM வலைத்தளத்தின் படி முறையாக இருவருக்கும் பணி வழங்கினர் என்று அதில் குறிப்பிடவில்லை. அவர்கள் E Pass தகுதி பெற என்ன “சிறப்பு திறன்கள்´´ என்று அதில் குறிப்பிட வில்லை.
கடந்த 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி Wei JianQin -யின் E Pass ரத்து செய்யப் பட்டது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி Chen mei யின் E Pass ரத்து செய்யப் பட்டது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு Wei JianQin EP ரத்து செய்யப்பட்டது. அதேபோல் Chen mei யின் EP வெளியான தேதியிலிருந்து 19 நாட்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது. இருவருடைய E Pass களை MOM திடீரென ரத்து செய்வதற்கான காரணங்களை ஆவணங்களில் குறிப்பிடவில்லை.
இருவருடைய E Pass ரத்து செய்யப்பட்ட பின்னர் சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டும் என்பதே சிங்கப்பூரின் விதிமுறையாகும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல், சிங்கப்பூரிலேயே சட்டவிரோதமாக தங்குவதற்கான வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி பெடோக் நார்த் சாலையில் உள்ள HDP பிரிவில் குடியேற்றம் மற்றும் சோதனை சாவடி ஆணையம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
Wei JianQin சிங்கப்பூரில் சட்ட விரோதமாக 15 ஆண்டுகள், மூன்று மாதங்கள் மற்றும் 13 நாட்கள் தங்கி இருக்கிறார். அதேபோல் Chen mei 13 ஆண்டுகள், ஐந்து மாதங்கள் மற்றும் நான்கு நாட்கள் சட்ட விரோதமாக சிங்கப்பூரில் தங்கி இருக்கிறார்.
குற்றத்தை ஒப்பு கொண்ட இருவருக்கும் குடியேற்ற சட்டத்தின் கீழ் தலா ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும், 2000 டாலர் அபராதமும் வழங்கப்பட்டது.