குறைந்த சம்பளம் வழங்கிய முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு!!
சிங்கப்பூரில் ஜூன் 6 ஆம் தேதியன்று மனிதவள அமைச்சகம்(MOM) ஓர் அறிக்கையை வெளியிட்டது.
சில்லறை ஊழியர்களுக்கு குறைவான ஊதியத்தை தொடர்ந்து வழங்கிய இரண்டு தவறான முதலாளிகள் குறைந்த ஊதியம் வழங்கும் முறை சரி செய்யப்படும் வரை வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒர்க் பெர்மிட்டுக்கு விண்ணப்பிப்பதோ அல்லது புதுப்பிப்பதோ முடியாது என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டுள்ள இரண்டு முதலாளிகளும் சில்லறை விற்பனைக் கடை நடத்தி வருகின்றனர்.அவர்கள் வேலை அனுமதியில் வெளிநாட்டு ஊழியர்களை எடுப்பதை ரத்து செய்துள்ளது.
அவர்கள் 12 சில்லறை ஊழியர்களுக்கு ஏப்ரல் 2023-ஆம் ஆண்டு முதல் ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு சுமார் $450 குறைவாக சம்பளம் கொடுத்துள்ளனர். அவர்கள் வழங்கிய சம்பளமானது குறைந்த சம்பளம் என்று மனிதவள அமைச்சகம் கூறியது.
பலமுறை இரண்டு முதலாளிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் அதை பின்பற்ற வில்லை என்றும் கூறியது.
மனிதவள அமைச்சகம் ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை சோதனையை மேற்கொண்டது.
ஒவ்வொரு துறைக்கும் PWM (முற்போக்கு ஊதிய மாதிரி) திட்டம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆறு மாத இடைவெளிக்கு பின் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
கட்டங்கட்டமாக உயரும் சம்பள முறையை முதலாளிகள் பின்பற்றுகின்றனரா? ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்குகிறார்கள்? என்பதை அறிய சோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தது.
Follow us on : click here ⬇️