Singapore News in Tamil

ஜப்பானில் Covid-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு!

People wearing protective masks, amid the coronavirus disease (COVID-19) outbreak, make their way in Tokyo, Japan, August 6, 2021. REUTERS/Kim Kyung-Hoon

ஜப்பானில் Covid-19 கட்டுப்பாடுகளைத் தளரத்த சுகாதார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.Covid-19 நோயை எளிதில் தொற்றக் கூடிய வழக்கமான நோய்களின் வகைப்பிரிவில் வகைப்படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இதனை சார்ஸ், காச நோய் போன்ற மிகக் கடுமையான தொற்று நோய்களின் வகைப்படுத்த உள்ளது.மே மாதம் 8-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு இந்த முறை நடப்புக்கு வரும். ஜப்பான் பிரதமர் Fumio Kishid தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறைக் கொண்டு வந்த பிறகு தான் நோய் பரவல் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியும். மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணியும் நடைமுறையைத் தளர்த்துவதும் இதில் அடங்கும். ஜப்பானிய அரசாங்கம் தடுப்பூசித் திட்டத்திற்கு செலவாகும் மருத்துவச் செலவுகளையும் ஏற்றுக் கொள்ள கூட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.