சிங்கப்பூர் வீடமைப்பு வளர்ச்சி கழகம் வாடகை விவரத்தை குறித்து அறிக்கை வெளியிட்டது. மறு விற்பனை வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கழகம் தெரிவித்தது.
மறு விற்பனை வீட்டு விலைக்குறியீடு கடந்த ஆண்டின் நாலாம் காலண்டுடன் அதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிட்டு பார்த்ததில் இரண்டு மடங்கு விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது சுமார் 172 புள்ளியை எட்டியுள்ளதாக கழகம் தெரிவித்தது.
மறு விற்பனை வீட்டு விலைக் குறியீட்டை கடந்த ஆண்டு முழுமைக்கும் ஆக கணக்கிட்டு பார்த்தால் அதன் விழுக்காடு 10 விழுக்காட்டிற்கு மேல் அதிகரித்துள்ளது.
வீடமைப்பு வளர்ச்சி கழகம் சுமார் 36,000 வீடுகளை வாடகைக்கு விட கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்து இருந்தது. மொத்தமாக 56,000 வீடுகளைக் கடந்த ஆண்டின் இறுதியில் வீடுகள் வாடகைக்கு விடப்பட்டதாக கழகம் தெரிவித்தது.