இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள பள்ளியில் அபிகேல் சுவெர்னர் 25 வயதுடைய ஆசிரியர் 6 வயது சிறுவனால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
அதன் பின் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இவ்வாரம் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து, இதுகுறித்து வழக்கு தொடுக்கப் போவதாக கூறியிருந்தார்.
பள்ளி அமைந்துள்ள மாவட்ட நிர்வாகத்தின் மீது வழக்கு பதியப்பட்டது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆறு வயது மாணவனிடம் துப்பாக்கி இருப்பதாக பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாகவும், அவன் துப்பாக்கியைக் கொண்டு பலரையும் மிரட்டிக் கொண்டிருப்பதாகவும் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், நிர்வாகம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் காரணமாகவே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்த பொழுதே நடவடிக்கை எடுத்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது என்று ஆசிரியரின் வழக்கறிஞர் கூறினார். இச்சம்பவம் காரணமாக பள்ளித் தலைவர் அவர் பதவில் இருந்து நீக்கப்பட்டார்.