சிங்கப்பூரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இயற்கை எய்தினார்!!

சிங்கப்பூரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இயற்கை எய்தினார்!!

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Cheo Chai Chen நேற்று(ஜூன் 5) காலமானார்.

தனது 73 வயதில் இயற்கை எய்தினார்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் Nee Soon Central தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

நன்யாங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மேலும் அவர் ஒரு தொழிலதிபர்.

அவர் மொத்தம் 7 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். அவர் இரண்டு கட்சிகளிலும் உறுப்பினராக இருந்தவர்.

அவர் Nee Soon Central தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1991 முதல் 1997 வரை பதவி வகித்தார்.

அவரின் இரங்கல் செய்தியை அறிந்தவுடன் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி,திரு.Cheo கட்சிக்கும், நாட்டிற்கும் கௌரவத்துடனும்,தைரியத்துடனும் சேவை செய்ததாக கூறியது.

அவரின் இறுதி அஞ்சலி இன்று (ஜூன் 6) நடைபெறும்.