சிங்கப்பூருக்கு நீங்கள் S-Pass இல் செல்ல வேண்டுமா? சம்பளம் எவ்வளவு என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றிய விவரங்களை தெளிவாக பார்ப்போம்!!

சிங்கப்பூருக்கு நீங்கள் S-Pass இல் செல்ல வேண்டுமா? சம்பளம் எவ்வளவு என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றிய விவரங்களை தெளிவாக பார்ப்போம்!!

சிங்கப்பூரில் மனிதவள அமைச்சகம் அவ்வப்போது புதிய மாற்றங்களை அறிவித்து வருகிறது. அதே போல் இவ்வாண்டில் S Pass வேலைகளின் சம்பளத்தை உயர்த்தியுள்ளதை அறிவித்துள்ளது.

2023 செப்டம்பர் மாதம் முதல் S-Pass இல் வேலை பார்ப்பவர்களுக்கு $3000 சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும், Financial & service sector இல் வேலை பார்ப்பவர்களுக்கு $3500 சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் அறிவித்திருந்தது.

2024 செப்டம்பர் மாதத்தில் இருந்து S-Pass இல் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. S-Pass எல் வேலை பார்ப்பவர்களுக்கு $3150 சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும், Financial & Service sector இல் வேலை பார்ப்பவர்களுக்கு $3650 சம்பளம் உயர்த்தபடுவதாக தெரிவித்துள்ளது.