சிங்கப்பூரில் இரண்டு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு!!
அந்த இரண்டு நிறுவனங்களும் 100 லிட்டர் எண்ணெயைக் கடலில் கொட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.
Leth Incargo Marine Services,Hellenic Overseas Maritime Enterprises ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீதும் தனித்தனியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடல் நீர் மாசுபாடு தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த இரண்டு சம்பவங்களில் ஒரு சம்பவம் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதியும், மற்றொரு சம்பவம் கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி நடந்ததாக தெரிவிக்கின்றன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு நிறுவன உரிமையாளருக்கும், முகவருக்கும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். $1000 வெள்ளி அபராதமாக விதிக்கப்படலாம். அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.
ஒவ்வொரு சம்பவத்திலும் ஒரு டேங்கரிலிருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெய் ஏற்றும் போது கடலில் எண்ணெய் கசிந்ததாக கூறப்படுகிறது.
அலட்சியமாக நடந்து கொண்டதாக அந்த இரண்டு நிறுவனங்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இந்த இரண்டு நிறுவனங்களின் வழக்குகளும் விசாரணைக்கு வரவுள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg