சிங்கப்பூரில் விமான போக்குவரத்து தொடர்பான முதல் ஆசிய பசிபிக் உச்சநிலை மாநாட்டை அரசாங்கம் நடத்தவிருக்கிறது. இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெறும்.
இதில் தொழில்துறை தலைவர்கள், ஆசிய பசிபிக் வட்டாரத்தைச் சேர்ந்த அரசாங்கம் உள்ளிட்டோர் கலந்துக் கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யவிருக்கிறது.
சிவில் விமான போக்குவரத்து ஆணையம், விமான பாதுகாப்பு அற நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து மாநாட்டை ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது. மாநாட்டில் பல்வேறு அம்சங்களை மேம்படுத்துவதை பற்றிப் பகிர்ந்து கொள்ளப்படும் என்றுத் தெரிவித்தன. குறிப்பாக விமான போக்குவரத்து பாதுகாப்பை வலுப்படுத்துவது, செயல்முறைத் தகவல், தொழில்நுட்பம் ஆகியவற்றை குறித்தும் பகிர்ந்து கொள்ளப்படும்.
ஆணையத்தின் தலைமை இயக்குனரான Han Kok Juan கூறியதாவது,“ தனிப்பட்ட தேசிய செயல்முறைகளை ஒவ்வொரு நாடும் கொண்டிருக்கும். இருந்தாலும் விமான போக்குவரத்து என்பது எல்லை தாண்டிய விவகாரம் ஆகும் ´´.
கிருமி பரவல் காலகட்டத்திற்குப் பிறகு மாநாடு நடைபெறுகிறது. இப்பொழுது விமானப் போக்குவரத்து வழக்க நிலைக்கு திரும்பி உள்ளது. அதாவது நோய் பரவல் காலகட்டத்திற்கு முன்பு இருந்த நிலைக்கு திரும்பியுள்ளது. இதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வட்டார ஒத்துழைப்பு அவசியம் தேவை என்று குறிப்பிட்டார். மாநாடு உகந்த நேரத்தில் நடைபெறுவதாகும் கூறினார்.