சிங்கப்பூரில் ஏர்போர்ட்டில் வந்துள்ள புதிய நடைமுறை!!

சிங்கப்பூரில் ஏர்போர்ட்டில் வந்துள்ள புதிய நடைமுறை!!

நீங்கள் சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் Immigration பாதையில் அதிகாரிகள் இல்லாததால் அடுத்து என்ன செய்வது? எப்படி கடந்து செல்வது? என்பது உங்களுக்கு தெரியவில்லையா? இதோ உங்களுக்காக!! அதிகாரிகளின் உதவிகள் இல்லாமலும் நீங்கள் கடந்து செல்ல முடியும்.எப்படி கடந்து செல்லலாம் என்பதை இந்த தகவலை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


நீங்கள் சிங்கப்பூர் செல்வதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே MyICA app அல்லது ICA வெப்சைட் மூலம் SGArrival card பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

சிங்கப்பூருக்கு சென்று ஆட்டோமேட்டிக் இமிகிரேஷனில் உங்களுடைய பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். அதில் முதல் கேட் திறக்கப்படும். மேலும் Foot Mark இருக்கும் அதில் ஏறி நிற்க வேண்டும்.அது உங்களை போட்டோ எடுக்கும். போட்டோ எடுப்பதால் நீங்கள் அணிந்திருக்கும் மாஸ்க்,கண்ணாடி போன்றவற்றை அணிந்து இருந்தால் அவற்றை கழட்ட வேண்டும். மேலும் தேவைப்பட்டால் உங்களுடைய கைரேகை கேட்கும். அதை நீங்கள் பதிவு செய்தால் இரண்டாவது கேட் திறக்கப்படும். இவை அனைத்தும் முடிந்தவுடன் நீங்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்து விடலாம்.

அல்லது உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் இமிகிரேஷன் ஆபீஸர் அருகில் இருப்பார்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

இவ்வாறு நீங்கள் அவர்கள் உதவி இல்லாமலும் Immigration பாதையை கடந்து செல்ல முடியும்.