சிங்கப்பூரில் ரயில் சேவையில் ஏற்பட்ட தடங்கல்!! பயணிகளுக்கு இலவச பேருந்து வசதி!!

சிங்கப்பூரில் ரயில் சேவையில் ஏற்பட்ட தடங்கல்!! பயணிகளுக்கு இலவச பேருந்து வசதி!!

சிங்கப்பூரில் வடக்கு – தெற்கு ரயில் பாதைகளில் சுவா சூ காங்கிற்கும்,உட்லண்ட்ஸ்க்கும் இடையேயான சேவைகள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நேற்று(ஜூன் 03) பாதிக்கப்பட்டது.

மின்சாரக் கோளாறு காரணமாக ரயில் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டதாக SMRT நிறுவனம் தெரிவித்தது.

தடங்கலானது மாலை சுமார் 5.50 மணியளவில் ஏற்பட்டதாக கூறியது.

இதனால் யூ டீ மற்றும் உட்லண்ட்ஸ்க்கு இடையேயான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது.

மேலும் சுவா சூ காங்கிலும் பாதிக்கப்பட்டது.

பயணிகளுக்கு சுவா சூ காங் மற்றும் உட்லண்ஸ்க்கும் இடையே இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டதாக தெரிவித்தது.

SMRT அதிகாரிகள் வட்டப்பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதைகளைப் பயணிகள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினர்.

ரயில் சேவையில் ஏற்பட்ட தடங்கல் இரவு 8.10 மணியளவில் இயல்பு நிலைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தடைப்பட்டிருந்த சுவா சூ காங் மற்றும் உட்லண்ஸ்க்கும் இடையிலான இரு திசைகளின் ரயில் சேவைகளும் மீண்டும் செயல்பட தொடங்கியது.

மின்சாரக் கோளாறு காரணம் எதனால் ஏற்பட்டது? என்பதை SMRT கண்டறிந்துள்ளது.

மின்னல் தாக்கியதால் ரயில் சேவையில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டு தடங்கல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.