இந்தியா -பாகிஸ்தான் போட்டி!!எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!!

இந்தியா -பாகிஸ்தான் போட்டி!!எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!!

இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் பரபரப்புகளும் ரசிகர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறினார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இது விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. “இந்தியா-பாகிஸ்தான் போட்டி மற்ற போட்டிகளை விட அதிக விவாத வகையில் இருக்கும் ” என்று அவர் கூறினார்.

இருப்பினும் விளையாட்டின் மீதான அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க வீரர்கள்,விளையாட்டினை எப்படி கையாள்வது என்பதிலும், தன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவர்களின் கடின உழைப்பையும் முழு திறன்களையும் கொடுத்தால் மட்டுமே ஒரு சிறந்த வீரராக திகழ முடியும் என்று பாபர் அசாம் கூறினார்.

T20 உலகக் கோப்பை பொறுத்தவரை 2007 ஆம் ஆண்டு இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஒரு நாள் போட்டி தொடரில் இந்தியா இரண்டு முறை கோப்பையை வென்றது. 2017 ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்தது.இரண்டு அணிகளும் சிறந்த அணிகள் தான் இதில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். வெற்றி பெறும் அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.