சிங்கப்பூரில் நடைபெற்ற STEM FEST நிகழ்ச்சி!! தங்கள் படைப்பாற்றலை ஆர்வமுடன் வெளிப்படுத்திய மாணவ, மாணவிகள்!!

சிங்கப்பூரில் நடைபெற்ற STEM FEST நிகழ்ச்சி!! தங்கள் படைப்பாற்றலை ஆர்வமுடன் வெளிப்படுத்திய மாணவ, மாணவிகள்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய STEM FEST நிகழ்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம்,பொறியியல்,கணிதம் போன்ற துறைகளில் உள்ள மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தினார்கள். இத்துறையின் முக்கியத்துவத்தை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

இந்த ஆண்டு குறிப்பாக பெண்களை அதிக அளவில் ஈடுபடுத்தி அவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமுதாய, மேம்பாட்டுத் துணை அமைச்சர் திரு. கன் ஷீவெலிங் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கான கருப்பொருள் ‘இடைவெளிகளை குறைப்பது எதிர்காலத்தை உருவாக்குவது’ என்பதாகும். அறிவியல்,தொழில்நுட்பம் பொறியியல்,கணிதம் ஆகிய துறைகள் பற்றிய விழிப்புணர்வை இளம் மாணவிகளிடையே ஏற்படுத்துவது தான் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சியை நடத்திய united women singapore அமைப்பின் மேலாளர் திருமதி.அனுபமா கண்ணன் அவர்கள் கூறியதாவது,
இத்துறையின் முக்கியத்துவத்தை பற்றி பெண்கள்
தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களை வழி நடத்துவதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார்.சிறு வயது முதலே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆர்வத்தை ஏற்படுத்தினால் எதிர்காலத்தில் அவர்களால் இந்த துறையில் தங்களை ஈடுபடுத்தி சிறப்பாக செயலாற்ற முடியும் என்று கூறினார்.

.அதில் Plastify எனும் வீசி எறியப்பட்ட பொருட்களை உடனடியாக மறு பயனீடு செய்யும் இயந்திரம்,விரல் நுனியில் இயங்கும் இயந்திர கருவிகள் உள்ளிட்டவை இடம் பெற்றன. மேலும் இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.

இந்த ஆண்டு STEM நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும்,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இது மாணவர்களின் ஆர்வத்தை அதிகரித்து பல்வேறு திறன்களை கற்றுக்கொள்ள உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

இளம் வயதிலேயே அந்த துறைகள் பற்றி நன்கு அறிந்திருந்தால் மாணவிகள் அவற்றில் சரியான வேலை வாய்ப்புகளை தேட இயலும். சமீப காலமாக அறிவியல்,தொழில்நுட்பம்,பொறியியல்,கணிதம் ஆகிய துறைகளில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமுதாய,குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.