எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.... மகிழ்ச்சியில் திக்கு முக்காடும் விக்னேஷ் சிவன்...
சென்னை:தமிழ் திரையுலகில் இயக்குநர் விக்னேஷ் சிவன் முதன்முதலில் ‘போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்தனர்.
தமிழ் சினிமாவில் இயக்குநராக நமக்குத் தெரிந்த விக்னேஷ் சிவன் 2007 ல் ‘சிவா’ எனும் படத்தில் கிருஷ்ணா என்பவருக்கு நண்பராக நடித்துள்ளார்.2015 ல் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கிய போது நயன்தாராவுக்கும்,விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின்பு 2018 ல் ‘தானா சேர்ந்த கூட்டம்’,2020 ல் ‘பாவ கதைகள்’,2022 ல் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்தவர்.
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவை காதலித்து 2022ல் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. அக்டோபர் 2022-ல் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களுக்கு உயிர்,உலக் என வித்தியாசமான பெயர்களை சூட்டினர்.
நயன்தாரா குழந்தைகளுடன் இருக்கும் போட்டோ அவ்வபோது சமூக வலைதளங்களில் வைரலாகி லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்கிற்கு குடும்பத்தாருடன் சுற்றுலா சென்றுள்ள விக்னேஷ் சிவன் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “12 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்திற்கு செருப்பு அணிந்து, கையில் ரூ.1000 பணத்துடன் படப்பிடிப்புக்கு அனுமதி பெற வந்தேன். இப்போது என் அன்பு குழந்தைகளுடன் அதே இடத்தில் மகிழ்ச்சியாகவும்,நிறைவாகவும், உணர்ச்சிகரமாகவும் உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் இவன் இயக்கத்தில் உருவான ‘ஜாவான்’ படம் நயன்தாரா,ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை தந்தது. இந்நிலையில் தற்போது லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg