IPL -ல் கலக்கிய விராட் கோலி T20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகமா…!!!காரணம் என்ன?

IPL -ல் கலக்கிய விராட் கோலி T20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகமா...!!!காரணம் என்ன?

IPL -ல் கலக்கிய விராட் கோலி T20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகமா…!!!காரணம் என்ன?

ஐசிசி யின் ஒன்பதாவது T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடரானது நாளை தொடங்கி ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்போட்டியில் இந்தியா,ஆஸ்திரேலியா ,இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ,பாகிஸ்தான் உள்ளிட்ட 20 நாடுகள் விளையாட உள்ளன.

இந்த தொடரில் இந்தியா,பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணியுடன் மோத உள்ளது.

இந்த தொடருக்கு முன்னதாக நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் சில நாட்களுக்கு முன்னதாகவே அமெரிக்கா சென்று விட்டனர்.

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஏற்கனவே பயிற்சிக்காக நியூயார்க் சென்று விட்டனர். ஆனால் நேற்றிரவு தான் விராட் கோலி நியூயார்க் சென்றடைந்தார். இதனால் அவர் வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடுவதற்கான சாத்தியம் குறைவு என்று கூறப்படுகிறது.

இருப்பினும், ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிரான முதல் லீக் போட்டியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், அந்த முதல் போட்டியில் விளையாடும் லெவனில் எந்த வீரர்கள் இடம் பெறுவார்கள்? கோஹ்லி எந்த ஆர்டரில் பேட் செய்வார் என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.