அசத்தல் வெற்றி!!சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!!

அசத்தல் வெற்றி!!சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!!

அசத்தல் வெற்றி!!சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி…

சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் இரட்டையர் ஜோடியான ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி. இவர்கள் தரவரிசை பட்டியலில் ஆறாம் நிலையில் உள்ள தென் கொரிய ஜோடியான கிம் சோ யோங் மற்றும் காங் ஹீ யோங்கை ஆகியோரை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டியானது ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் நீடித்தது.தரவரிசை பெறாத இந்திய ஜோடி 18-21, 21-19, 24-22 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

உலக தரவரிசையில் 30வது இடத்தில் இந்திய ஜோடி உள்ளது.

மேலும் கடந்த ஆண்டு ஹாங்சோவ் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதே அணியிடம் தோல்வி அடைந்தது. ஆனால் இந்த முறை சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று அதனை மாற்றியது.

வியாழன் (மே 27) அன்று நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ட்ரீசா மற்றும் காயத்ரி ஜோடியானது வெண்கலப் பதக்கம் வென்றது. அது 16வது சுற்றில் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள கொரியா ஜோடியான பேக் ஹா நா மற்றும் லீ சோ ஹீ ஜோடியை தோற்கடித்தது.

ஜூன் 1-ஆம் தேதி சனிக்கிழமை(இன்று) நடைபெற உள்ள அரையிறுதியில் ட்ரீசா மற்றும் காயத்ரி ஜோடியானது நான்காவது இடத்தில் உள்ள நமி மட்சுயாமா மற்றும் சிஹாரு ஷிடா ஜப்பானிய ஜோடியிடம் மோதிகின்றனர்.

BWF வேர்ல்ட் டூர் சூப்பர் 750 நிகழ்வில் ட்ரீசா மற்றும் காயத்ரி ஜோடி மட்டும் போடியம் முடிவதற்கான போட்டியில் மீதமுள்ள இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.