AI – ஐ பயன்படுத்தி குற்றம் புரிவோருக்கு புதிய சட்டங்கள் இயற்ற திட்டம் உள்ளதா?

AI - ஐ பயன்படுத்தி குற்றம் புரிவோருக்கு புதிய சட்டங்கள் இயற்ற திட்டம் உள்ளதா?

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றம் புரிவோருக்கு எதிராக புதிய சட்டங்கள் இயற்ற இப்போதைக்கு திட்டம் இல்லை.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு ஏற்கனவே சட்டங்கள் நடைமுறையில் இருப்பதாக தொடர்பு, தகவல் அமைச்சர் திருமதி. ஜோசஃபின் தியோ கூறியுள்ளார்.

ஆசிய தொழில்நுட்ப மாநாட்டின் இரண்டாம் நாளில் பேசிய அவர், ‘AI தொழில்நுட்பதால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க அதைப் பற்றிய முழு புரிதல் என்பது அவசியம்’ அதை புரிந்து கொள்வதற்கு நேரம் தேவை என்று திருமதி தியோ சொன்னார்.

மேலும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை நிர்வகிப்பதற்கான ஒரு கட்டமைப்பு சிங்கப்பூரில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாக கூறினார்.

மக்கள் பயன்பெறும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க உலகளாவிய ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்தினார்.