இனி வழிதவறிச் செல்ல வாய்ப்பே இல்லை!!சிங்கப்பூர் ரயில் நிலையங்களில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய டெக்னாலஜி!!

இனி வழிதவறிச் செல்ல வாய்ப்பே இல்லை!!சிங்கப்பூர் ரயில் நிலையங்களில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய டெக்னாலஜி!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ரயில் நிலையங்களில் வழிதவறி செல்லாமல் இருப்பதற்காக கொண்டுவரப்பட்டது தான் மெய்நிகர் தொழில்நுட்பம்.

சைனா டவுன், அங் மோ கியோ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் மக்கள் இனி வழிதவறிச் செல்வதற்கு வாய்ப்பே இல்லை. அவர்கள் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் (Virtual Technology) மூலமாக வழிதவறிச் செல்வதை தவிர்க்க முடியும்.

சிங்கப்பூர் எண்டர்பிரைஸ் நிறுவனமும்,SBS டிரான்சிட் நிறுவனமும் இணைந்து இந்த புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளன.

சைனா டவுனில் உள்ள மெய்நிகர் தொழில் நுட்பத்திற்கு சில்வியா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது AI தொழில்நுட்பத்தைக் கொண்டு செயல்படுகிறது.

வரும் ஜூலை மாதத்திலிருந்து AI தொழில்நுட்பத்தின் உதவியால் காது கேளாதவர்களுக்கு உதவும் வகையிலும், மேலும் பேசும் மற்றும் எழுதப்படும் சொற்களை சைகை முறையில் மொழி பெயர்க்கும்.

இதேபோல் அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பத்திற்கு அய்வா என பெயரிடப்பட்டுள்ளது.

அய்வா தொழில்நுட்பம் பயணிகளுடன் பேசும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வழிகள் அறிய, ரயில் பயணச்சீட்டு பெற மற்றும் அருகிலுள்ள கழிப்பறையை கண்டறிய ஆகியவற்றிற்கு இந்த தொழில்நுட்பம் உதவி புரிகிறது.

மேலும் இது போன்ற அறிவார்ந்த, பசுமைமிக்க மற்றும் நடமாட்டத்திற்காக அனைவராலும் எளிதில் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஆறு ஒப்பந்தங்கள் நேற்று(மே 31) கையெழுத்திடப்பட்டுள்ளது.