அஸ்வின் தந்தை அல்ல ஆசான்!! கிரிக்கெட் தொடர்பான கேள்விக்கு அழகாக பதில் கூறிய பிள்ளைகள்!!

அஸ்வின் தந்தை அல்ல ஆசான்!! கிரிக்கெட் தொடர்பான கேள்விக்கு அழகாக பதில் கூறிய பிள்ளைகள்!!

சென்னை: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தன் மகள்களிடம் கிரிக்கெட் தொடர்பான கேள்விகளை கேட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் தனது யுடியூப் சேனலில் தொடர்ந்து கிரிக்கெட் தொடர்பான வீடியோவை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் தன் மகள்களுக்கு கிரிக்கெட் தொடர்பான வினாடி வினா போட்டி நடத்தி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அஸ்வின் தான் விளையாடிய 15 போட்டிகளில் மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வின் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் டெஸ்ட் தொடரில் 500 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடர் பற்றிய கேள்விகளை தன் மகள்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இருவருமே அழகாக பதில் கூறினார். சில கேள்விகளுக்கு தவறாக பதில் கூறினாலும் பல கேள்விகளுக்கு சரியான பதிலையே கூறினார்கள். இந்த வினாடி வினா போட்டி வைத்த வீடியோவை அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். வீடியோவிற்கு கீழே நாங்கள் T20 உலகக்கோப்பை நடைபெறுவதற்கு ஆவலாக உள்ளோம்… நீங்கள் எப்படி? என்று பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் இந்தச் சிறுவயதில் இவ்வளவு அறிவா.., தந்தை கிரிக்கெட் வீரர் ஆனாலும் தன் மகள்களுக்கும் கிரிக்கெட் பற்றிய பொது அறிவு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளனர்.