பிரபல நடிகரின் 'திருமண அழைப்பிதழ் 'இணையதளத்தில் வைரல்!!
சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களும் நடிகைகளும் கல்யாணம் செய்து கொண்டால் எங்கு தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போகுமோ என்று பயந்து கல்யாணம் செய்து கொள்ளாமல் உள்ளவர்கள் இருக்கின்றனர். குறிப்பாக திரிஷா, விஷால், சிம்பு, அனுஷ்கா உள்ளிட்ட நடிகர்கள் கல்யாணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் ஜூன் 9 ம் தேதி திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்திரை உலகில் பாடகராகவும்,நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் பிரேம்ஜி. கங்கை அமரனின் மகனும் வெங்கட் பிரபுவின் தம்பியுமான நடிகர் பிரேம்ஜி, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும்’ சத்திய சோதனை ‘உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவரது’ என்ன கொடுமை சார் இது ‘ என்ற வசனம் அனைவராலும் பேசப்பட்டு வந்தது. இந்த வசனத்திற்கு மிகுந்த ரசிகர்கள் உண்டு.பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த 45 வயதான பிரேம்ஜிக்கு ஒரு வழியாக திருமணம் நடக்க உள்ளது.
இவரது திருமண பத்திரிக்கை இணையதளத்தில் தற்போது வைரல் ஆகியுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் சிலர் ‘என்ன கொடுமை சார் இது’ என்று அவரது வசனத்தையே வைத்து கேலி செய்து வருகின்றனர். திரை உலகினர் ரசிகர்கள் உள்ளிட்ட நண்பர்கள் அவருக்கு வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg