சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு விடுமுறை தின நாட்களில் சீனக்காரர்கள் நடத்தப்படும் கடைகள் பெரும்பான்மையாக மூடப்பட்டிருக்கும். இவற்றில் பானக் கடைகளும் அடங்கும்.
சீனப் புத்தாண்டு விடுமுறை அன்று கடைகள் மூடப்பட்டிருக்கும் தினங்களில் வாடிக்கையாளர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் இருப்பார்கள்.
இதனை அறிந்த மலாய் உணவை விற்கும் கடை ஆண்டுதோறும் வழக்கமாக இலவசமாக காப்பியையும் தேநீரையும் வழங்கி வருகிறது.
மெக்பர்சன் வட்டாரத்தில் சர்க்கிட் ரோடு, பிளாக் 89-ல் இருக்கும் உணவங்காடியில் Makanan singapura எனும் கடை இருக்கிறது.
Collin ng என்ற நபர் உணவு அங்காடிக்கு உணவு வாங்க சென்றுள்ளார். அப்பொழுது அவர் அனுபவத்தை முகநூலில்(Facebook)பகிர்ந்துள்ளார். அதில் அவர் அங்கு மொத்தம் 4 பானக் கடைகள் மூடப்பட்டிருந்தது. அப்பொழுது மலாய் கடைக்காரர் பானம் அளிக்க முன்வந்தார்.
அனைத்து பானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், அதற்கான தேவை வாடிக்கையாளர்களிடம் அதிகமாக உள்ளது. மலாய் கடைக்காரர் நினைத்திருந்தால் லாபம் நோக்கில் பார்த்திருந்து லாபத்தை ஈட்டி இருக்கலாம். ஆனால் மலாய் கடை அவ்வாறு செய்யவில்லை. கடையின் இச்செயலைப் பாராட்டி தன் அனுபவத்தையும் முகநூலில் பகிர்ந்துள்ளார்.