சிங்கப்பூர் சுகாதாரத்துறையில் அதிக வேலை வாய்ப்பை எதிர்பார்க்கலாமா?

சிங்கப்பூர் சுகாதாரத்துறையில் அதிக வேலை வாய்ப்பை எதிர்பார்க்கலாமா?

சிங்கப்பூர்: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது மூதாதையர்களின் கூற்று. மக்கள் நோய் நொடி இல்லாமல் இருந்தால்தான் நாட்டையும் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் முன்னேறச் செய்ய முடியும். ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆக்கப்பூர்வமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

நோய் தடுப்பு பணிகளிலும், தரமான மருந்துகள் எளிதாக மக்களுக்குச் சென்றடையும் படி சுகாதாரத் துறையானது முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையின் பங்கிடானது ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியை குறிக்கிறது. இவ்வாறு சுகாதாரத்துறையின் முக்கியத்துவத்தை பற்றி நாம் அறிகிறோம்.

சிங்கப்பூரில் தற்போது சுகாதாரப் பராமரிப்பு துறையில்
ஆள் பற்றாக்குறை காரணமாக சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.சுகாதாரத் துறையில் உள்ள முன்னணி தலைவர்களில் 90 விழுக்காட்டினர் சுகாதார பராமரிப்பு துறையில் வேலை ஆட்கள் குறைவாக இருப்பதாக கூறுகின்றனர்.

சுகாதாரப் பராமரிப்பு துறைகளில் உள்ளவர்களை ஆதரிக்க 5 வழிகளில் உள்ளன.

1. கூடுதல் சம்பளம் வழங்கப்படலாம்.

2. சலுகைகளை அறிவிக்கலாம்.

3. நோய் வருவதற்கு முன்பே தடுக்கலாம்.

4. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வேலையை எளிதாக்கலாம்

5. தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கலாம்.

சுகாதார பராமரிப்பு துறைகளில் உள்ளவர்களுக்கு இவ்வாறு ஆதரவு அளிப்பதன் மூலம் வேலையில் ஏற்படும் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவரங்கள் அனைத்தும் NTUC Learning Hub வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார பராமரிப்பு துறையில் உள்ள வேலைகளில் முன்னேறுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக பல வல்லுநர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.