சூப்பர் மார்க்கெட்டில் கைவரிசையை காட்டிய பெண்!! சிக்கியது எப்படி?

சூப்பர் மார்க்கெட்டில் கைவரிசையை காட்டிய பெண்!! சிக்கியது எப்படி?

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திருடியதாக சந்தேகிக்கப்படும் 49 வயது பெண் கைதாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோ பாயோ பகுதியில் உள்ளது கிம் கியாட் அவன்யு சூப்பர் மார்க்கெட். இங்கு திருட்டு வேலை நடந்திருப்பதாக (மே 28) காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

கடையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்ட பெண் மீது கடை மேலாளர் சந்தேகப்பட்டார்.
உடனே அவர் கண்காணிப்பு கேமராவை சரி பார்க்க தொடங்கினார். அதைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்தப் பெண் சில பொருட்களை எடுத்து தள்ளுவண்டியிலும் மேலும் சில பொருட்களை தான் கொண்டு வந்த கைப்பைக்குள்ளும் போட்டுக்கொள்கிறார். பின்பு பணம் ஏதும் கட்டாமல் அப்படியே கடையில் இருந்து வெளியேறுகிறார். இந்த காட்சிகள் அப்படியே கேமராவில் பதிவானது.

இதை கண்ட கடை மேலாளர் அவரை தடுத்து நிறுத்தினார்.உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த காவல்துறையினர் அப்பெண்ணின் கைப்பையை பரிசோதித்த போது அதில் 50க்கும் மேற்பட்ட பொருட்கள் இருந்தது.

அவற்றில் குழந்தைக்கான பால் மாவு, பழங்கள்,காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.
அப்பொருட்களின் விலையானது சுமார் 1000 வெள்ளி இருக்கும்.

இந்தப் பெண் அதே பகுதியில் வேறு சில கடைகளிலும் இது போன்ற திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

அந்தப் பெண் குற்றவாளி என நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.