மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்த டிரையர்!!
மே 28 அன்று, Yishun தெரு 81 இல் உள்ள ஆர்க்கிட் பார்க் காண்டோமினியத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சுமார் 50 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு காலை 11:40 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.
Yishun மற்றும் Ang Mo Kio தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மூன்றாவது மாடியிலிருந்து கறும்புகை வருவதைக் கண்டதாக தெரிவித்தது.
அதிர்ஷ்டவசமாக குடியிருப்பில் யாரும் இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்றனர்.
சர்வீஸ் யார்டில் இருந்த உலர்த்தி மற்றும் சலவை இயந்திரம் தீப்பிடித்து எரிவதை கண்டுபிடித்தனர்.
அவர்கள் தண்ணீர் ஜெட் மூலம் தீயை அணைத்தனர்.
துரதிர்ஷ்டவசமாக, புகையை சுவாசித்ததால் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
டிரயர் மற்றும் வாஷிங் மெஷினில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மின்சாதனங்களில் அதிக சுமைகளைத் தவிர்க்கவும், பயன்பாட்டில் இல்லாதபோது மின்சாதனங்களை அணைக்கவும். இவ்வாறு செய்தால் தீ விபத்து நேருவதைத் தவிர்க்கலாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg