Singapore Job News Online

சிங்கப்பூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கனவு நினைவாகி விட்டது!

சிங்கப்பூரில் வாடகை வீட்டில் இருப்பவர்கள் தற்போது சொந்த வீட்டை வாங்கி உள்ளார்கள். கடந்த 2022-ஆம் ஆண்டு 700 பேர் சொந்த வீட்டை வாங்கி உள்ளதாக வீடு அமைப்பு வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

வாடகை வீட்டில் இருந்த 7,800 க்கும் மேற்பட்டோர் கடந்த 10 ஆண்டுகளில் சொந்த வீடுகளை வாங்கி உள்ளனர். வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மூலமாக கிடைக்கும் மானியம் மூலம் இது சாத்தியமானதாகத் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சுமார் 2,300 பேர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் சொந்த வீடுகளை வாங்குவதற்கான ஆதரவு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அவர்கள் புது வீடுகளை தேர்ந்தெடுத்து விட்டனர். அதன் கட்டுமான பணிகள் முடிவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், புதுத் தொடக்க வீட்டு திட்டத்தை இன்னும் மேம்படுத்த கழகம் முயற்சி செய்து வருகிறது. இந்த புதிய திட்டமானது பலதரப்பட்ட வீட்டு தேவைகளை பூர்த்தி செய்யவும், வீட்டு வேலைகளை கட்டுபடியாக இருப்பதற்கும் பயன்பெறும்.

இவ்வாறு இதனை மேம்படுத்த உள்ளதாகவும் கழகம் தெரிவித்துள்ளது. புது வீடுகள் அடுத்த மாதம் திறக்கப்படும். அப்பொழுது இத்திட்டம் நடப்புக்கு வரும் என்று குறிப்பிட்டனர்.

மூன்று அறை வீடுகளை வாங்க நினைக்கும் வாடகை வீட்டுக்காரர்கள் அதற்கு தகுதி பெற்றிருக்க வேண்டும். அதற்கு தகுதி பெற்றால் அவர்கள் தேர்ந்தெடுத்து குறைந்த குத்தகைக் காலத்தில் வழங்கப்படும். இதற்கு சில நிபந்தனைகள் இருப்பதாகவும் கூறினர்.

தற்போது,அவர்கள் ஈரறை வீடுகளை மட்டுமே வாங்க முடியும். நீக்குப் போக்கான ஈரறை வீட்டுத் திட்டத்தின் கீழ் 45 முதல் 65 ஆண்டுகள் வரைக் கொண்ட குத்தகை காலம் மூலம் மட்டுமே வாங்க முடியும்.