Tamil Sports News Online

சிங்கப்பூரில் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தானியக்க பேருந்து சேவை அறிமுகம்!

சிங்கப்பூரில் உள்ள Moovita என்ற நிறுவனம் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்தின் சாலைகளை ஆய்வு செய்தது. சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது.

இதற்காக ஓட்டுனர் இல்லா இலவச பேருந்துச் சேவையை வழங்க திட்டமிட்டு இருந்தது. அதைப்போல் ஓட்டுநர் இல்லாத இலவச தானியக்க பேருந்து வழங்கியுள்ளது.

தற்போது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இலவசமாக தானியக்க பேருந்துச் சேவை அறிமுகமாகியுள்ளது. இந்த சேவை கல்லூரி வளாகத்திலும்,King albert park MRT நிலையத்துக்கும் இடையில் இயக்கப்படும். இந்த சேவையை ஓராண்டு வரை நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களும் ஊழியர்களும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.