Tourist visa வை எப்படி புதிப்பிக்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். சிங்கப்பூரில் இதனை Short Time Visa என்று கூறுவார்கள்.
Tourist Visa வில் அதற்கான Expiry Date இருக்கும். சிங்கப்பூருக்கு நீங்கள் எந்த நாள் வருகிறீர்களோ அந்த நாளிருந்து 30 நாட்கள் முடிவுதற்கு 7 நாட்களுக்கு முன் Tourist Visa புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு புதிப்பிக்கவில்லை என்றால், மீண்டும் திரும்ப வேண்டும்.
புதிப்பிக்க அனுமதி கிடைக்கவில்லை என்றால் நேரடியாக ICA கட்டடத்திற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் புதிப்பிக்க அனுமதி அளிப்பார்கள்.
சிங்கப்பூர் வருவதற்கு அதிகபட்ச ஒரு லட்சம் வரை 2 மாதங்களுக்கு செலவாகும்.இவ்வளவு செலவு செய்து விசாவைச் சரியான நேரத்தில் புதுப்பிக்க தவற விடுவதால் 1 மாதம் மட்டும் தங்கிவிட்டு, மீண்டும் திரும்ப வேண்டும். இதனால் 2 மாதங்களுக்குச் செலவு செய்தது,1 மாதத்திற்குள் திரும்பி போவதால் வீணாகிவிடும். இந்த தவறைச் செய்யாமல் சரியான நேரத்தில் புதிப்பித்து விடுங்கள்.
ஒரு சிலர் 3-வது மாதங்கள் இருக்கலாமா? என்ற கேள்வி இருக்கும்.3 மாதங்கள் தங்குவதற்கு அவ்வளவு எளிதாக அனுமதி கிடைக்காது.அதற்கு சரியான காரணங்கள் இருக்க வேண்டும்.இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாது.நேரடியாகச் சென்று மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.