அடேங்கப்பா... சுவரே இல்லாத வீடா... சிங்கப்பூரின் பிரம்மாண்டத்தில் இதுவும் ஒன்று..
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சி கழகமானது சுவரே இல்லாத புதிய வகை வீடமைப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தது.
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் பல வித்தியாசமான கட்டுமானங்கள் வீடமைப்புகளில் மேற்கொள்ளப்படுவதுண்டு. அதுபோல் சிங்கப்பூரிலும் ஒரு வித்தியாசமான வீடமைப்பை சிங்கப்பூர் வீடமைப்பு கழகம் அறிமுகம் செய்ய உள்ளது.
“ஒயிட் பிளாட்ஸ்” எனும் புதிய வீடுகளில் வரவேற்பு அறைக்கும் மற்ற அறைகளுக்கும் இடையில் சுவர்கள் இல்லை.வீடுகளை வாங்குவோர் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப அறைகளையும் அமைத்துக் கொள்ளலாம்.
மேலும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சுவர்களை வீட்டு உரிமையாளர்கள் பொருத்திக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலாங்- வாம்போ பகுதியில் கட்டப்படவிருக்கும் புதிய வீடுகளில் தான் இந்த புதிய அம்சம் இடம்பெறப் போகின்றது.
காலாங்-வாம்போவில் மேலும் சுமார் 310 மூன்று அறை கொண்ட வீடுகளும், நான்கு அறை கொண்ட வீடுகளும் கட்டப்பட உள்ளன.
மேலும் சுவர்கள் இல்லாத வீடுகளின் விலை மாறுபடும்.
அதன் விலைகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் புதிய வீடமைப்பனா ‘ஒயிட் பிளாட்ஸ்’ வீடுகளை தேர்வு செய்யாதவர்களுக்கு சுவர்கள் கொண்ட சாதாரண வீடுகள் தரப்படும். எந்த மாதிரியான வீடமைப்பு வேண்டும் என்பதை வீடு வாங்குவோர் தீர்மானிக்கலாம்.
வீடு அமைப்பு வளர்ச்சி கழகமானது மக்களின் மாறிவரும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு வீடுகளை அமைத்து தருவதில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றங்களை கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg