என்னது!!புஷ்பா 2 வில் நடனமாட போவது இவரா? சமந்தாவை பீட் செய்யப் போகிற நடிகை யார்?

என்னது!!புஷ்பா 2 வில் நடனமாட போவது இவரா? சமந்தாவை பீட் செய்யப் போகிற நடிகை யார்?

சென்னை: 2012 இல் சுகுமார் இயக்கத்தில்
வெளிவந்த புஷ்பா படத்தில் தெலுங்கில் டாப் நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்தனர். அதிரடி ஆக்க்ஷன் படமாக உருவான புஷ்பா உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

திரைக்கதை ,வசனம், பாடல் என அனைத்தும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.

இந்த சூப்பர் டூப்பருக்கு காரணம் அல்லு அர்ஜுனின் திறமை மிக்க நடிப்பு என்றாலும் சமந்தாவின் கவர்ச்சி நடனமும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. படத்தில் ஊ…சொல்லுறியா மாமா… என்ற பாடலுக்கு அவர் போட்ட ஆட்டமானது அனைத்து இளைஞர்களின் மனதையும் கொள்ளைக் கொண்டது.

அதில் அவர் மிகவும் கவர்ச்சியுடன் உடலை வளைத்து நெளித்து ஆடி இளசுகளின் மனதை கொள்ளைக் கொண்டார். இந்தப் பாடல் மிகவும் வைரலாகி ஹிட்டானது. சமந்தாவின் ஆட்டத்தை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் கூட்டம் குவிந்தது.

புஷ்பா படத்தின் வெற்றிக்கு சமந்தாவின் ரசிகர்களும் ஒரு முக்கிய காரணம் என்று பேசப்பட்டது.

புஷ்பா படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து தற்போது புஷ்பா 2 படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படம் இந்தியாவில் பெங்காலி மொழியிலும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முதல் பான் இந்தியா திரைப்படம் என்ற பெருமையைச் சேர்த்துள்ளது.

இந்நிலையில் புஷ்பா 2 – படத்திலும் அசத்தலான குத்தாட்ட நடனம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த முறை சமந்தா ஆடவில்லை என்று கூறப்படுகிறது.சமந்தா ஆடவில்லை என்றால் வேறு எந்த நடிகை தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தன.

இப்படத்தில் சமந்தாவிற்கு பதில் அனிமல் படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வரும் ட்ரிப்டி டிம்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இவர் சமந்தா ஆடிய ஆட்டத்தை பீட் செய்வாரா, சமந்தா ரசிகர்களிடையே தனக்கென பிடித்த இடத்தை ட்ரிப்டி தட்டி செல்வாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.