சிங்கப்பூர் சீருடைப் பிரிவு அதிகாரிகளின் ஓய்வு வயதில் புதிய மாற்றம்!!

சிங்கப்பூர் சீருடைப் பிரிவு அதிகாரிகளின் ஓய்வு வயதில் புதிய மாற்றம்!!

சிங்கப்பூர்: உள்துறை அமைச்சகத்தின் சீருடை பிரிவு அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயது 57 ஆக உயர்த்தப்பட உள்ளதாக உள்துறை,சட்ட அமைச்சர் கா.சண்முகம் அறிவித்துள்ளார்.இது வரும் 2025-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

ஹோட்டல் ஆர்ச்சர்ட்டில் (மே 24) நடைபெற்ற உள்துறை அமைச்சகத்தின் 332 சீருடை அதிகாரிகளுக்கான பதவி உயர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் கூறினார்.

காவல்துறை ,சிறைத்துறை, குடிமை தற்காப்பு படை, மத்திய போதை பொருள் ஒழிப்பு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் சீருடை அதிகாரிகள் 56 வயதை எட்டும் போது அவர்கள் விருப்ப ஓய்வு அல்லது விரும்பினால் மேலும் ஒரு ஆண்டு கால பணியினை தொடரலாம் என கூறினார். ஓய்வு வயது உயர்வால் குறைந்தது 14000 அதிகாரிகள் பயனடைவர் என்றும்,அவர்களுக்கு இந்த புதிய மாற்றம் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு நிகழ்ச்சியில் சுமார் 6,402 அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இவ்வாறு ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதன் மூலம் அனுபவமிக்க அதிகாரிகளின் திறமை மற்றும் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 135 அதிகாரிகள் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், அவர்களில் சில விழுக்காட்டினரை சீருடை சேவைத்துறை புதிய வேலைகளுக்கு மாற உதவி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2026-ஆம் ஆண்டில் ஓய்வு வயது 64 ஆக உயர்த்தப்படும். 2030-ஆம் ஆண்டில் அது 65 ஆக உயர்த்தப்படும்.

சிங்கப்பூர் மக்கள் சீருடை சேவை அதிகாரிகளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறினார்.

குடிநுழைவு சோதனை சாவடி அதிகாரி செந்தாமரை வையத்தியலிங்கம்(53) துணை உதவி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார்.அவர் ஓய்வு உயர்வு மாற்றத்தை தான் வரவேற்பதாக கூறினார்.