சிங்கப்பூரில் புக்கிட் தீமா Turf city பகுதியில் உருவாகவிருக்கும் வீடுகள்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள Turf City இல் புதிதாக 20000 வீடுகள் வரை கட்டப்பட உள்ளன. புக்கிட் தீமாவில் பொது வீடமைப்பு வருவது 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. இந்த தகவலை தேசிய வளர்ச்சி துறை அமைச்சர் டெஸ்ட் மண்ட் லீ அறிவித்தார்.
மேலும் நகரத்தின் வேலை இடத்திற்கு பக்கத்திலேயே வீடு இருக்க வேண்டும் என்று விரும்பும் சிங்கப்பூர்களின் எண்ணிக்கை கூடுகிறது என்றும் அவர் கூறினார். தற்போது புக்கிட் தீமாவில் சுமார் 2500 கழக வீடுகள் இருப்பதாக வீடு அமைப்பு வளர்ச்சி கழகத்தின் இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது.
திட்டமிடப்பட்ட புக்கிட் தீமா Turf city பகுதியில் கார்களை உபயோகப்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
நடப்போருக்கு வசதிகள் அதிகம் இருக்கும் என்றும், போக்குவரத்து சிறப்பாக இருக்கும் என்றும் நகர சீரமைப்பு ஆணையம் கூறியது.அரசாங்கம் ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் 10 நிமிட தூரத்திற்குள் அனைத்து வசதிகளும் அமைந்துள்ளவாறு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு MRT நிலையங்கள் அமைந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg