Singapore News in Tamil

சிங்கப்பூரில் நடைபெற்ற ஓட்டுநர்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் நேற்று நடந்த சாங்கி விமான நிலையத்தில் டாக்ஸி, வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் ஆலோசகர் யோ வான் லிங் கலந்துக் கொண்டார். அவர் அக்கறைக்குரிய சில அம்சங்களையும் அறிவித்தார்.

தேசிய டாக்ஸி சங்கம்,தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம் ஆகியவற்றைக்கான ஆலோசகர் யோ வான் லிங்.இவ்வாண்டு சிங்கப்பூர் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும், வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் சம்பளம் உயரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அக்கறைக்குரிய சில அம்சங்கள் இருப்பதாக தெரிவித்தார்.சிங்கப்பூருக்கு அதிக பயணிகள் வந்துக் கொண்டு இருக்கின்றனர்.இதனால்,ஓட்டுநர்களின் சம்பளம் உயர்த்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.ஆனால், அதிக பயணிகள் வருவதால் சுகாதார குறித்தும் அக்கறை இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

நேற்று ஓட்டுநர்களுக்கு அன்பளிப்பு பைகள் வழங்கப்பட்டது.ஓட்டுநர்களின் பிரச்சனைகள், தேவைகள் அனைத்தையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.