சிங்கப்பூரில் Componship club புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குடியிருப்பு சமூக வசதி கொண்ட கழகம் மூலமாக அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இதில் சமூக சேவை நிபுணர்கள் முதல் வசதிக் குறைந்த குடும்பங்கள் வரை ஓய்வு எடுப்பதற்கான இடமாகவும், புத்துணர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நியூ ஃபோர்க் சமூக சேவை அமைப்பின் கீழ் நடத்தப்படுகிறது. இப் புதிய கழகத்தின் நோக்கமானது,“ சமூகத்தில் சேவைத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், நம்பிக்கை கொண்டு வருவதே´´ ஆகும்.
சமூக சேவை அமைப்பு, சமூக அமைப்போடு ஒன்றிணைந்து திட்டங்களின் வழி நடத்துவார்கள். இத்தகைய முயற்சியால் பலன் பெறுவோர்களின் தேவைகள் நிறைவேற்றப் படும். இவ்வாறு சட்ட உள்துறை அமைச்சர் க.சண்முகம் கூறினார். சிங்கப்பூர் சமூகத்தில் மனநல சுகாதார அமைப்பைக் குறித்து அறிந்து கொள்ளவும் உதவும் என்றார். சமூகத்தில் மனநிலை சுகாதார விழிப்புணர்வு இன்னும் முழுமையாக செயல்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.