அடுத்த மாதம் செயல்பட தொடங்க உள்ள புதிய நிலையங்கள்!!
சிங்கப்பூர்: தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் உள்ள 7 புதிய நிலையங்களில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
சூரிய மின் உற்பத்தி தகடுகள் என்பது சூரியனிலிருந்து பெறப்படும் ஆற்றலை மின்னாற்றலாக மாற்றக்கூடிய ஒரு அமைப்பாகும். இது சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மேலும் சூரிய சக்தியானது வற்றாத மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆகும்.இப்படி பெறப்படும் ஆற்றலை பயன்படுத்துவது சுலபம் மற்றும் மின் கட்டணமும் குறைவு.
தற்போது சிங்கப்பூர் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் சோலார் பேனல்கள் பொருத்துவதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளது. அதனால் தற்போது சிங்கப்பூரில் உள்ள தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் புதிய நிலையங்களில் சோலார் பேனல்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நிலையத்தில் உள்ள சூரியசக்தி தகடுகளும் சுமார் 460 கிலோ வாட்ஸ் வரை மின் உற்பத்தி செய்யும்.மேலும் நிலையத்தின் நுழைவாயில்களில் உள்ள விளக்குகளை ஒளிரச் செய்தல் போன்ற பயன்பாடுகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்.
மேலும் தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் பகுதிகள் காத்தோங்- பாயா லேபார் விரைவுச்சாலையா சுரங்கப் பாதையில் இருந்து 37 சென்டி மீட்டர்க்கு மேலே அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.போக்குவரத்து நெரிசல் உள்ள அப்பகுதியில் சூரிய மின் உற்பத்தி தகடுகள் பொருத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளதால் அந்நிலையங்களுக்கு தேவையான மின்சாரத்தை தானாகவே உற்பத்தி செய்ய அது உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நிலையங்கள் அடுத்த மாதம் 23-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg