கிருமி பரவல் காரணமாக மூன்று ஆண்டுகளாக சீன புத்தாண்டு முழுமையாக இடம் பெறவில்லை. இந்த ஆண்டு சீனபுத்தாண்டின் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் மக்கள் அனைவருக்கும் தனது சீன புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர் Lee Hsien Loong.
புத்தாண்டைக் குடும்பங்களுடன் ஒன்று கூடி வழக்கத்தை காட்டிலும் உற்சாகம் அதிகரிக்கும் என்றும் கூறினார். இந்த புத்தாண்டு அனைவருக்கும் அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
நோய் பரவலை சமாளிக்க போராடியவர்களையும் நினைவில் வைத்துக் கொள்வது அவசியம் என்றும் கூறினார். தற்போது கிருமி பரவல் சீராக இருந்தாலும் கூட தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சுயமாக கிருமி தொற்று பரிசோதனை செய்து கொள்ளும் படியும் அவர் தெரிவித்தார். மூத்தவர்களை காண செல்லும்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சென்ற 2022-ஆம் ஆண்டு ஒட்டுமொத்தக் கருவள விகிதம் குறைந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டினார். இளையர்கள் பலர் திருமணத்தையும், பிள்ளை பேற்றையும் வாழ்வின் முக்கிய இலக்காகக் கொண்டு இருக்கின்றனர். இது மன நிறைவளிப்பதாகவும் கூறினார். அரசாங்கம் பிள்ளை வளர்ப்பில் உருவாகும் நெருக்கடிகளைத் தவிர்க்க உதவும் என்றார். சிங்கப்பூர் மக்கள் நல்ல உடல் நலத்தோடும், சீனப் புத்தாண்டு மகிழ்ச்சியாக அமையவும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
“ ஆரோக்கியமே மிகப்பெரியச் செல்வம் ´´, என்றும் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong குறிப்பிட்டார்.