AI தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூர் ஊழியர்கள்!! அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள்!!

AI தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூர் ஊழியர்கள்!! அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள்!!

சிங்கப்பூர்: தொழில் நுட்பமானது நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் சமீப காலமாக மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு பாடத்தை தேர்வு செய்து படிப்பதும் அதைப் பற்றி தெரிந்து கொள்ளவும் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.அப்படிப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு திறனில் அப்படி என்னதான் உள்ளது.இது தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட மனித மூளையை போல செயல்படுகிறது.மேலும் வேலை நேரத்தை மிச்சப்படுத்தி கற்பனை திறனை வளர்க்கிறது .

மனிதனுக்கும்
இயந்திரத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு என்னவென்றால் படைப்பாற்றல் மற்றும் அதன் செயலாக்க திறனாகும்.பொதுவாக செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனைப் போன்று திட்டமிடுதல், ஆராய்தல்,செயல்படுத்துதல் போன்று கிட்டத்தட்ட மனித மூளையைப் போன்றே செயல்படுகிறது.கணினி அறிவியலின் பரந்த கிளையாக பார்க்கப்படும் செயற்கை நுண்ணறிவு மனித நுண்ணறிவு திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்க பயன்படுகிறது.மனித எண்ணங்களை புரிந்து செயலாற்றுவது போன்ற மேம்பட்ட பணிகளை செய்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனமும், Linkedin இன் தளமும் கூட்டுச் சேர்ந்து சோதனை ஆய்வை மேற்கொண்டது. அதில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த 31,000 பேர் கலந்து கொண்டனர்.

அதில் 88 சதவீதம் பேர் செயற்கை நுண்ணறிவு திறனை சிங்கப்பூர் ஊழியர்கள் பயன்படுத்துவதாக தெரிவித்தது. இந்த தகவல்கள் அந்த இரண்டு நிறுவனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் பேசுகையில் AI தொழில்நுட்பமானது வேலை நேரத்தை மிச்சப்படுத்தவும்,கற்பனை வளத்தை,மேம்படுத்தவும், மேலும் முக்கிய பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள உதவுவதாகவும் கூறப்படுகிறது.