தனது மூத்த பயிற்சியாளரின் காலை தொட்டு வணங்காததால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறிய கிரிக்கெட் வீரர்!!

தனது மூத்த பயிற்சியாளரின் காலை தொட்டு வணங்காததால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறிய கிரிக்கெட் வீரர்!!

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் மூத்த பயிற்சியாளரின் காலை தொட்டு வணங்காத காரணத்தால் தனக்கு அணியில் இடம் தர மறுத்ததாக கூறியுள்ளார்.

T20 உலக கோப்பை 2007 மற்றும் 2011 ஒரு நாள் போட்டி என இரண்டு உலக கோப்பைகளை பெற்று தந்த இந்திய வீரருக்கு தான் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான கௌதம் கம்பீர் ஆடுகளத்தில் ஒரு கட்டுக்கடங்காத வீரராகவே வலம் வந்தார். எதிர் அணியுடன் தேவையில்லாமல் பிரச்சனை செய்தல்,கோபப்படுதல் போன்ற காரணத்தினால் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டதும் நிதர்சனமானது.

அவர் இந்த தகவலை அஸ்வின் தனது யூடியூப் சேனலில் அவரை பேட்டி எடுத்தப்போது பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து பேசிய அவர், தனக்கு ஏறக்குறைய 12 அல்லது 13 வயது இருக்கும், அப்போது பயிற்சி தலைவரின் காலை தொட்டு வணங்காத காரணத்தால் தன்னை அண்டர் 14 தொடரில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார். அது அவருக்கு முதல் அண்டர் 14 தொடர் என்று கூறினார்.அன்று முதல் அவர் யார் காலிலும் விழக்கூடாது என்றும் தன் காலிலும் யாரும் விழக்கூடாது எனவும் முடிவெடுத்தாக கூறினார்.

தற்போது நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராகவும் உள்ளார்.

கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பெற்று ப்ளே ஆப் சுற்றிக்கு முன்னேறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.