சிங்கப்பூர் மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்புக்களில் ஈடுபட விருப்பமாக இருக்கின்றது என்று தொடர்பு தகவல் அமைச்சர் கூறினார். சிங்கப்பூரில் முன்னுரிமைகளில் ஒன்றான மின்னிலிக்கச் சமூக உருவாக்கம் பற்றி கூறினார். அதில் அனைவரையும் உள்ளடக்கம் நடைமுறையில் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். அதில் எவரும் விடுபட்டு போகாமல் வகையில் இருக்க வேண்டும்.
உலகப் பொருளியல் கருத்தரங்கம் டாவோ நகரில் நடைபெற்றது. இதனிடையில், செய்திகளிடம் சந்தித்தபோது இதனை பற்றி தெரிவித்தார். இதற்கென சமூக ஆலோசனைத் திட்டம் உருவாக்கப்படும் என்று கூறினார்.
அதில், இதற்கு என்னென்ன திறன்கள் தேவைப்படுகிறது என்பதை ஆராய்வதற்கும், சிங்கப்பூர் மக்கள் மின்னிலிக்க சமூகமாய் உருவாகி முன்னேறுவதற்கும் இது உதவும் என்றார்.
சிங்கப்பூரில் தொழில்நுட்பத்தை நிர்வகிக்கும் அணுகு முறையில் நம்பிக்கையும் பாதுகாப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார். அனைத்துலக நாடுகளும் இந்த அணுகுமுறையில் ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் தெரிவித்தார். இதுபோன்ற உச்சநிலை மாநாட்டில் வெளிப்பட்டதாக கூறினார்.