சிங்கப்பூரின் தேர்தல் துறைக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் உத்தரவு!!

சிங்கப்பூரின் தேர்தல் துறைக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் உத்தரவு!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வாக்காளர் பட்டியலில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அப்பணியை ஜூலை 31க்குள் முடிக்குமாறு தேர்தல் துறைக்கு (ELD)பிரதமர் திரு லாரன்ஸ் வோங் உத்தரவிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் முன்னதாக நடைபெற உள்ளதால் தேர்தல் விதிமுறைகளை அந்நாட்டு அரசு வெளியிட்டு இருக்கிறது அதன்படி நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின்14(1) பிரிவின்படி, ஜூலை 31,2024ஆம் தேதிக்குள் வாக்காளர் அடையாள அட்டையின் திருத்தும் பணியை முடித்திருக்க வேண்டும் என்று கூறுகிறது.

மேலும் வாக்காளர் தங்களது விவரங்களை புதுப்பிக்கும் வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று கூறுகிறது.

ஜூன் 1,2024 இன் படி பின்வரும் தகுதிக்கான விவரங்களை பூர்த்தி செய்யும் எந்த ஒரு நபரும், வாக்களிக்க தகுதியானவர் என்று கூறப்படுகிறது.

* சிங்கப்பூர் குடிமகனாக வகுத்தல் அவசியம்.

* 21 வயதை நிரம்பியவராக இருக்க வேண்டும்.
சிலருக்கு தங்களுடைய NRIC யில் சிங்கப்பூர் குடியிருப்பு முகவரி இருந்து அவர் வேலை நிமித்தமாக வேறு நாட்டில் வசிப்பவராக இருந்து முகவரி மாற்றம் செய்திருந்தால் அவர்கள் குடிவரவு மற்றும் சோதனை சாவடி மையங்களில் சரி பார்த்து வாக்களிக்க அனுப்பப்படுவர்.

மேலும் வாக்காளர்களின் திருத்தப்பட்ட விவரங்கள் ஜூன்2024
பொது ஆய்வுக்காக திறக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் (ELD) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரர்கள் தங்களது வாக்காளர் அட்டையின் விவரங்களை எவ்வாறு சரி பார்க்கலாம் என்பது பற்றிய கூடுதல் விவரங்களை அவர்கள் பொது ஆய்வுக்காக திறந்திருக்கும் போது வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.