நடுவானில் திடீரென ஆட்டம் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!! இருக்கையிலிருந்து மேலே பறந்த பயணிகள்!!

நடுவானில் திடீரென ஆட்டம் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!! இருக்கையிலிருந்து மேலே பறந்த பயணிகள்!!

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு நோக்கிச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மிகவும் மோசமாக நடுவானில் ஆட்டம் கண்டது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து Boeing 777-300ER ரக விமானம் சுமார் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் சிங்கப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

திடீரென மிக மோசமாக விமானம் ஆட்டம் கண்டதால் தாய்லாந்தின் தலைநகரான பேங்காக்கில் சிங்கப்பூர் நேரப்படி மாலை சுமார் 4.45 மணியளவில் விமானம் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் உள்ள அனைவருக்கும் உதவிகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

இறந்த நபரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அவர் 73 வயதுடையவர் என்றும்,பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.

இதில் 7 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 23 பயணிகள் மற்றும் 9 பணியாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 பேர் லேசான காயங்கள் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விமானம் திடீரென விமானம் மேல்நோக்கி பறந்தது. பின்னர் விமானம் ஆட்டம் கண்டது. அதன்பின் திடீரென கீழே இறங்கியதாக பயணி ஒருவர் கூறினார்.

ஒரு சிலர் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

அதனால் சீட்டுக்கு மேலே உள்ள பெட்டி வைக்கும் இடத்தில் மோதியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை அளிக்க தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது.