தீயணைப்பு வீரர் கென்னத் டேய்க்கு இறுதி மரியாதை!! விடைபெற்றார் கென்னத்!!

தீயணைப்பு வீரர் கென்னத் டேய்க்கு இறுதி மரியாதை!! விடைபெற்றார் கென்னத்!!

சிங்கப்பூர்: கடந்த வியாழக்கிழமை(16 மே) சிங்கப்பூரின் தென்மேற்கே நங்கூரமிட்டிருந்த சீன கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீயைக் கட்டுப்படுத்த முயன்ற போது தீயணைப்பு படை வீரர் கென்னத் டேய் உயிரிழந்தார்.இந்நிலையில்
தீயணைப்பு பணியின் போது மாண்ட அதிகாரி கென்னத் டேய் அவர்களுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இறுதி மரியாதையை நேற்று(மே 20) செலுத்தியது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தலைமையகத்தில் இறுதி அஞ்சலி நடைபெற்றது.

சுமார் 200 அதிகாரிகள் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரில் உள்ள 23 தீயணைப்பு நிலையங்களிலும்அதன் தலைமையகங்களிலும், குடிமைத் தற்காப்புக் கழகத்திலும் கடைசி தீயணைப்பு ஒலி முழங்க அவரைக் கௌரவப்படுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.

கேப்டன் டேயின் அர்ப்பணிப்பை பாராட்டியும் புகழ்ந்தும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆணையர் எரிக் யாப் (Eric Yap) பாராட்டினார்.

மேலும் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனுப்புக்குரியவர்களுக்கு தனது ஆறுதலை கூறினார்.

இது போன்ற வீரர்களால் நம் நாடு பெருமை கொள்கிறது என்றார்.

அனைத்து அதிகாரிகளும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

Red Rhino வாகனங்கள் ஒலி முழங்க கென்னத் டேய்க்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. ஆணையரின் உரைக்குப் பிறகு ஒலி முழங்கப்பட்டது.