சிங்கப்பூரில் இது நடந்தால் நன்றாக இருக்கும்… கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இளைஞர்கள்…

சிங்கப்பூரில் இது நடந்தால் நன்றாக இருக்கும்... கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இளைஞர்கள்...

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக திரு.லாரன்ஸ் வோங், இம்மாதம் 15ஆம் தேதியன்று அதிபர் தர்மன் சண்முகரத்னம், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் முன்னிலையில் பதவியேற்றார்.சிங்கப்பூரில் புதிய பிரதமராக திரு.லாரன்ஸ் வோங் அவர்கள் பதவியேற்றதை தொடர்ந்து அந்நாட்டு இளைஞர்களிடையே கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் இளைஞர்கள் தங்களது கருத்துக்களை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டனர்.

அதில் சிலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, முன்னாள் பிரதமர் சிறப்பாக செயல்பட்டதாகவும், தற்போது பதவியேற்ற திரு லாரன்ஸ் வோங் அவர்களும் அவரைப் போன்று சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் சிலர் சிங்கப்பூரை பசுமையான நாடாக மாற்ற வேண்டும் என்றும் பள்ளிகளில் குறைந்த செலவில் உணவு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். கடந்த சில நாட்களாகவே உணவுப் பொருட்களின் விலைவாசியும் அதிகரித்து இருப்பதாகவும் அதைக் குறைக்க வழி செய்யவும் கேட்டுக்கொண்டனர் . அங்கு வசிக்கும் இந்தியர்கள் குடியிருப்புகளுக்கு அதிக விலை கொடுத்து இருப்பதாகவும் அதைக் குறைக்க ஏற்பாடு செய்யவும் கேட்டுக்கொண்டனர்.

மேலும் சிங்கப்பூரில் உள்ள படித்த இளைஞர்கள் சிலர் வேறு நாடுகளுக்கு சென்று வேலை தேடுவதாகவும்,தங்கள் நாட்டிலேயே அவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரித்து முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் நாட்டில் பல ஆண்டுகளாக பயின்று வரும் இளைஞர்களுக்கு எளிதான முறையில் குடியுரிமை வழங்கும் வசதியை ஏற்படுத்தி தருமாறும் கேட்டுக் கொண்டனர்.