முதல் நாள் 50 பேர் பலி!! மறுநாள் 47 பேர் பலி!! கனமழை வெள்ளத்தால் பறிப்போகும் உயிர்கள்!!

முதல் நாள் 50 பேர் பலி!! மறுநாள் 47 பேர் பலி!! கனமழை வெள்ளத்தால் பறிப்போகும் உயிர்கள்!!

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் பொருட்சேதமடைந்துள்ளது.

மே 19-ஆம் தேதி அன்று, வடக்கில் உள்ள ஃபரியாப் மாகாணத்தில் குறைந்தது 47 பேர் இறந்ததுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முந்தைய நாள், கோர் மாகாணத்தில் இதேபோன்ற வெள்ளத்தால் 50 பேர் உயிரிழந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தான் அடிக்கடி இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்கிறது. காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்று கருதுகிறது.