சிங்கப்பூரில் சட்டவிரோத குதிரை பந்தயத்தில் ஈடுபட்டதாக 113 பேரிடம் விசாரணை!!

சிங்கப்பூரில் சட்டவிரோத குதிரை பந்தயத்தில் ஈடுபட்டதாக 113 பேரிடம் விசாரணை!!

சட்டவிரோத குதிரை பந்தயத்தில் ஈடுபட்டதாக 113 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களில் 103 ஆண்களும்,10 பெண்களும் அடங்குவர்.அவர்கள் 47 முதல் 90 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவித்தது.

ஏப்ரல் 27 முதல் மே 11 வரை சிங்கப்பூர் முழுவதும் நடந்த தொடர் சோதனைகளைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனையின் போது Tampines, Yishun மற்றும் Jurong West ஆகிய இடங்களில் இருந்து $60,000 ரொக்கம், மொபைல் போன்கள் மற்றும் குதிரை பந்தய உபகரணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சந்தேகநபர்கள் புக்மேக்கர்கள், ஓட்டப்பந்தயக்காரர்கள் மற்றும் Punters என நம்பப்படுகிறது.

சட்டவிரோத சேவையுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.

சட்டவிரோத பந்தய சேவைகளை நடத்துபவர்களுக்கு $500,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

ஏஜென்ட்டாக $200,000 வரை அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ளலாம்.

சட்டவிரோத சூதாட்டத்தை தவிர்க்குமாறு பொதுமக்களை காவல்துறை அறிவுறுத்தியது.

சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது.