மலேசியா தாக்குதல் சம்பவம்!! பலப்படுத்தப்பட்ட உட்லண்ட்ஸ்,துவாஸ் சோதனை சாவடிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள்!!

மலேசியா தாக்குதல் சம்பவம்!! பலப்படுத்தப்பட்ட உட்லண்ட்ஸ்,துவாஸ் சோதனை சாவடிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள்!!

சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் நேற்று(மே 19) ஏற்பட்டது.சோதனை சாவடிகளில் கூடுதலான பாதுகாப்பு சோதனை நடவடிக்கைக் காரணமாக போக்குவரத்து நெரிசலை பயணிகள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

மலேசியாவில் ஜொகூர் பாருவுக்கு அருகே உள்ள காவல்நிலையத்தில் மே 16-ஆம் தேதி தாக்குதல் சம்பவம் அரங்கேறியது. இதில் 2 காவலர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை ஜமாஆ இஸ்லாமிய பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர் நடத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடைப்படையில் இந்த குழுவுடன் தொடர்புடையவர்களைத் தேடி வருகின்றனர்.

இதனையடுத்து சிங்கப்பூருக்குள் நுழையும் வழியான சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கையை மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனைச் சாவடிகளில் வரிசையில் காத்திருக்கும் பயணிகள் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

காஸ்வேயைக் கடந்து பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஆகலாம்,துவாசில் வழியாக செல்வோருக்கு ஒன்றை முதல் இரண்டரை மணி நேரம் வரை ஆகலாம் என்று Beat The Jam செயலி நேற்றிரவு 11 மணி நிலவரப்படி காட்டியது.

இதனால் பேருந்து சேவைகளும் காலதாமதமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பாதுகாப்பு அதிகாரிகள் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்கின்றனர்.

சிங்கப்பூர் செல்லும் பாதையான உட்லண்ட்ஸில் இரவு எட்டு மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலும், மலேசியா செல்லும் பாதையான ஜோகூர் பாருவில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும் சோதனை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.இது வார இறுதி நாட்களைத் தவிர்த்து மே 19 முதல் 20 வரை,மே 24 முதல் ஜூன் 5 வரை ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.