சிங்கப்பூரில் சாலையில் கவிழ்ந்த கார்!! டிரைவர் இருக்கையில் சிக்கி கொண்ட நபர்!!

சிங்கப்பூரில் சாலையில் கவிழ்ந்த கார்!! டிரைவர் இருக்கையில் சிக்கி கொண்ட நபர்!!

சிங்கப்பூரில் லோரோங் 1 டோ பயோவில் சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரின் டிரைவர் இருக்கையில் சிக்கி கொண்ட 78 வயது முதியவர் மீட்கப்பட்டார்.

மேலும் சுயநினைவுடன் இருந்த அந்த நபரை டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் நேற்று(மே 10) அன்று நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு நேற்று மதியம் சுமார் 1.10 மணியளவில் தகவல் வந்ததாக தெரிவித்தது.

சம்பவத்தை அறிந்தவுடன் உடனடியாக குறைந்தது ஏழு SCDF பணியாளர்கள்,இரண்டு SCDF வாகனங்கள்,ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் மூன்று காவல்துறை வாகனங்கள் அனுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.