Singapore Job News Online

நியூசிலாந்து பிரதமர் ராஜினாமா! சிங்கப்பூர் பிரதமர் ஆச்சரியம்!

ஜனவரி 19ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வெளியான நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern ராஜினாமா செய்யப்போவதாகச் செய்தியைக் கேட்டு அறிந்ததும் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong ஆச்சரியப்பட்டதாக தெரிவித்தார். இதனை முகநூலில்(Facebook)பக்கத்தில் பதிவைப் பகிர்ந்துள்ளார். இவர் சிங்கப்பூருக்கு, “உறுதியான நண்பர்´´என்று கூறினார்.

கிட்டத்தட்ட ஈராண்டுகளாக கிருமி தொற்று பரவல் காரணமாக நேரடி சந்திப்பு தடைச் செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பிறகு திருமதி Ardern மீண்டும் வருகைப் புரிந்துள்ளார். திருமதி Ardern அவர் பணியில் சிறந்து விளங்குபவர் , மிகச் சிறந்த அர்ப்பணிப்பை கொண்டவர். இவர் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு சிங்கப்பூர் பிரதமர் Lee கூறினார்.

இவர்கள் சந்திப்பில் பல்வேறு துறைகளில் ஒத்துழைக்க அம்சங்கள் சேர்க்கப்பட்டது. பருவநிலை மாற்றம், பசுமைப் பொருளியல் போன்ற துறைகளில் சேர்க்கப்பட்டுள்ளது.இவர் பலருக்கு முன்மாதிரியாக திகழ்பவர் என்றும் அவர் குறிப்பிட்டார். Ardern குடும்பத்தினருக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.