கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு செய்யும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்த நபர்!!

கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு செய்யும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்த நபர்!!

சீனாவின் சோங்கிங்கில் 57 வயதுடைய நபர் ஒருவர் உடற்பயிற்சி கருவிகளில் கழுத்தில் தொங்குவது தொடர்பான ஆபத்தான உடற்பயிற்சியை மேற்கொண்டபோது உயிரிழந்தார்.

மே 16-ஆம் தேதி அன்று டியான்ஜியாங் கவுண்டியில் உள்ள செங்சி நகரில் உள்ள வெளிப்புற உடற்பயிற்சி பகுதியில் விபத்து ஏற்பட்டது.

நேரில் பார்த்தவர்கள் அந்த நபர் ஒரு பிரபலமான ஆனால் ஆபத்தான உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தார். கழுத்தில் கயிறு ஒன்றில் தொங்கிக்கொண்டு தங்கள் உடலை ஆட்டுவது போன்ற உடற்பயிற்சி .

பயிற்சியின் போது பாதிக்கப்பட்டவர் அதிக சக்தியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

நரம்பு சேதம், முதுகுத் தண்டு காயங்கள் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட கடுமையான காயங்களை ஏற்படுத்தும் என்பதால் காரணமாக நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டது.


பயன்படுத்தப்பட்ட கயிறு ஏற்கனவே உபகரணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும், அது அந்த நபருடையது அல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.