மருத்துவமனையில் உள்ள உணவு,குளிர்பான விற்பனை கடையில் தீ விபத்து!!

மருத்துவமனையில் உள்ள உணவு,குளிர்பான விற்பனை கடையில் தீ விபத்து!!

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள உணவு மற்றும் குளிர்பானங்கள் விற்பனை நிலையத்திற்கு சொந்தமான அடுப்பில் தீப்பிடித்தது.

மருத்துவ மையத்தில் சில்லறை பிரிவில் இருந்து 100 பேர் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டனர்.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


1 Lower Kent Ridge Road இல் One@KentRidge என்ற முகவரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மதிய வேளையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

4-ஆவது மாடியில் உள்ள அடுப்பில் தீ மூண்டதாக கூறியது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் நிறுவனத்தின் Emergency Response Team தீயை அணைத்தனர்.

சுமார் 10 நிமிடங்களுக்குள் நிலைமை கட்டுக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

“ஒத்துழைப்பு அளித்த பார்வையாளர்கள், நோயாளிகள்,ஊழியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்”.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.